சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வு
மாநில போட்டிக்கு தேர்வு
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
அரசு விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடந்தது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டன. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.