நவோதயா சீனியர் செகண்டரி பள்ளியில் தாத்தா பாட்டிகள் கௌரவிக்கும் விழா
அகாடமி நாமக்கல் நவோதயா சீனியர் செகண்டரி பள்ளியில் “தாத்தா பாட்டிகள்”; கௌரவிக்கும் விழா கொண்டாடப்பட்டது.
அகாடமி நாமக்கல் நவோதயா சீனியர் செகண்டரி பள்ளியில் “தாத்தா பாட்டிகள்”; கௌரவிக்கும் விழா கொண்டாட்டம். பிப்ரவரி - 24 நாமக்கல் அடுத்த கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் சனிக்கிழமை 24.02.2024 இன்று காலை 10.00 மணியளவில் பள்ளி கலையரங்கில் தாத்தா பாட்டிகளை கௌரவிக்கும் விழா கொண்டாடப்பட்டது. காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர் முதல்வர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு தொடங்கியது. மாணவர்கள் நடனம், நாட்டியம், மோனோ ஆக்டிங் என அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகச்சிறப்பாக செய்துகாட்டினார்கள். மழலைச்செல்வங்கள் தாத்தா-பாட்டியின் அருமை பெருமைகளையும், அவர்களின் அரவணைப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், தாத்தா பாட்டிகளை ஒருபோதும்; முதியோர் இல்லங்களில் விட்டுவிடக்கூடாது என்றும் இறுதிவரை அவர்களின் அன்பையும் அறிவுரையும் பெற்று கூட்டுகுடும்பமாக வாழவேண்டும் என்பது தத்துரூபமாக நடித்தும், பேசியும் உணர்த்தினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் குழந்தைகளின் நடிப்பால் உள்ளம் நெகிழ்ந்தனர். வந்திருந்த தாத்தா பாட்டிகள் அனைவருக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி முதல்வர் அவர்கள் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் புதுமையான பாடத்திட்டங்கள் பற்றியும் குழந்தைகள் மனஅழுத்தம் இன்றி கல்வி கற்கும் சிபிஎஸ்இ தேர்வு முறைகள் பற்றியும் அனைவருக்கும் புரியும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அனைவருக்கும் பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, சாமை தினை உணவுகள், இனிப்பு மற்றும் காரம் வகைகள் வழங்கப்பட்டு 12.00 மணியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.