புற்று நோயாளி தூக்கிட்டு இறப்பு
குமாரபாளையத்தில் புற்று நோயாளி தூக்கிட்டு இறந்தார்.
குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் மாதப்பன், 72. இவரது மனைவி சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இவருக்கு இல்லை. அதே பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மையத்தில் இருந்து வந்துள்ளார். இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருந்ததால், மையத்தினர் பவானி ஜி.ஹெச்.ல் சேர்த்தனர். அவரது நண்பர் மூலமாக பெருந்துறை ஜி.ஹெச்.ல் சேர்ந்தார். செப்.16ல் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் வந்து, குமாரபாளையம் வீட்டில் இருந்து, அங்கிருந்தும் வெளியேறினார். நேற்று காலை 08:00 மணியளவில், ராஜம் தியேட்டர் அருகே உள்ள மயானத்தில், மரத்தில் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று பார்த்து விசாரணை செய்ததில், அவர் மாதப்பன் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது சகோதரர் சேகரிடம் சொல்ல, அண்ணனை ஆம்புலன்ஸ் மூல ம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டுவந்தார். இவரை பரிசோத்தித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.