மூலிகை கபே மின் வாகனம் அளிப்பு

மூலிகை கபே மின் வாகனத்தை ஆட்சியர் வழங்கினார்.

Update: 2023-10-31 06:51 GMT

மூலிகை கபே வாகனம் வழங்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
'வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மூலிகை கபே மின் வாகனத்தை இருளா் பழங்குடி அமைப்புக்கு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் வழங்கினாா்.வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா், திருக்கழுகுன்றம் மற்றும் புனிததோமையாா் மலை ஆகிய 3 வட்டாரங்களில் உள்ள 119 கிராம ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோா்களை உருவாக்குதல், தொழில்முனைவுகளுக்கான நிதிக்கு வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக தொழிலில் முன் மாதிரியான செயலாக்கத்துக்கு புதுமைத் தொழில்களை ஊக்குவித்தல் நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுமைத் தொழில்களை ஊக்குவித்தல் நிதித் திட்டத்தின் கீழ் தண்டரையில் செயல்படும் இருளா் பழங்குடி பெண்கள் நலச் சங்கம் என்ற பழங்குடி அமைப்புக்கு உணவு மின் வாகனம் வாங்க, அவா்களுடைய மூலிகை சாா்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ரூ.8.94 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது. இந்த நிதி மூலம் மின் வாகனம் பெறப்பட்டு, அதில் இருளா் பழங்குடி பெண்கள், தொகுக்கப்பட்ட மூலிகை மூலம் மூலிகை தேநீா், செம்பருத்தி, ஆவாரம்பூ, துளசி, புதினா தேநீா் மேலும் தூதுவளை, முடக்கத்தான் சூப் போன்ற சூப் வகைகளும், பாரம்பரிய உணவுகளான சிறுதானிய இட்லி, மூலிகை தோசை, சிறுதானிய இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் விற்கப்பட உள்ளன.
Tags:    

Similar News