நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி கே.பி.இராமசுவாமி துவக்கி வைத்தார்
Update: 2023-09-14 05:52 GMT
நீர்த்தேக்க தொட்டி திறப்பு
கழகதலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் எடப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாய்லாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக முள்ளுக்குறிச்சி ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்காக நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் வலியுறுத்தியதின்படி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் KP.இராமசுவாமி தலைமையில் பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்