வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்க கடன் கூட்டு வட்டி, மீட்டர் வட்டி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டி.ஆர்.ஓ விடம் பாதிக்கப்பட்டோர் மனு
தமிழக முழுவதும் உள்ள வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்கங்களில் ஏராளமானூர் தங்கள் வீடுகளை பராமரிப்பதற்காகவும் புதிய வீடுகள் கட்டுவதற்காகவும் கடல் பெற்றுள்ளனர் இவற்றில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் உள்ள சுமர் நாற்பதுக்கு மேற்பட்ட வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏழை, நெசவாளர்கள், ஒரு லட்சம் முதல் 6 லட்சம் வரை கடன் பெற்றுள்ளனர் இந்த கடன்களுக்கு 18 சதன் முதல் 20% வரை வட்டி விகிதத்தை அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் கடனை திரும்ப கட்ட கூறியதில் ஏராளமானோர் கடனை தாங்கள் வாங்கிய கடனுக்கு மேல் வட்டியை கட்டியும் தற்பொழுது ஒரு லட்ச ரூபாய் பெற்று இருந்தால் 7 லட்ச ரூபாய் வரை கூட்டு வட்டி அசல் வட்டி மற்றும் பல்வேறு கணக்குகள் மூலம் வங்கியில் பணம் செலுத்த கூறுகின்றனர் அவ்வாறு செலுத்த தவறினால் வீடுகளை ஜப்தி செய்வதாகும் சுற்றறிக்கை விடுகின்றனர் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு கூட்டுறவு பணிப்பாளர் சங்கத்தின் சார்பில் இன்று நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்கள் குறைகளை கோரிக்கை மனுவாக வழங்கினர் அந்த மனுவில் ஏழை நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பெற்ற கடனை, நீண்ட கால தவணையில் செலுத்தவும், வட்டி, அபராத வட்டி, தண்ட வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை dஎடுக்க வேண்டும் என, தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர் நலச்சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ராசிபுரம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, அத்தனூர் போன்ற பகுதிகளில், ஏழை நெசவாளர்களும், விவசாயிகளும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ளோம்.
தொடர்ந்து, தொழில் பின்னடைவு ஏற்பட்டதாலும், கூட்டுறவு விதிகளுக்கு முரணாக வட்டி, அபராத வட்டி, தண்ட வட்டி என பல மடங்கு உயர்த்தியதாலும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படுகிறோம். இது தொடர்பாக, தமிழக முதல்வருக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தும், கூட்டுறவு வீட்டு வசதி துறை அதிகாரிகள், அதிகப்படியான வட்டியை கேட்டு, வீட்டை ஏலம் விடுவோம் என அச்சுறுத்துகின்றனர்.
இப்பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, ஏழை நெசவாளர்கள், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, வட்டி, அபராத வட்டி, தண்ட வட்டி இவற்றை தள்ளுபடி செய்து, அசலை மட்டும் நீண்ட கால தவணையில் செலுத்த, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.