புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சாலைப்பணி

பூமிபூஜை பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

Update: 2023-08-09 05:32 GMT

சாலைப்பணி பூமி பூஜை  

புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி ஊராட்சி T.S.ரோடு, அம்மாபாளையம் செல்லும் சாலை முதல் நொச்சிப்பட்டி வரை ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்துதல் பணிக்காக பூமிபூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் M.P.கௌதம், ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகர், வழக்கறிஞர் சுகுமார், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், கல்யாணி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News