கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் டிஜிட்டல் திறன் மையம் துவக்க விழா
டிஜிட்டல் திறன் மையம்
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் டிஜிட்டல் திறன் மையம் துவக்க விழா நடைபெற்றது, இது இளைஞர்களுக்கான டிஜிட்டல் திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான மையமாகும்.
விழாவில் பயிற்சி அலுவலர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் டிஜிட்டல் திறன் மையத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் கோபால கிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு அரசியின், நான் முதல்வன் திட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஜெயபிரகாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 21 விதமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
இதில் பூமி தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீதேவி முகில் நிதி, சி.ஜி.ஐ நிறுவன துணைத் தலைவர் பிரதீப் ஸ்வரிதரயன், சி.ஜி.ஐ இயக்குனர் நிர்பய் லும்டே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரி கிஷோர் குமார் தங்கவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பூமியின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சீனிவாசன் தனது உரையில் “2027 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியாக மாறும் என்றார்.
விழாவில் பூமி தொண்டு நிறுவனம் மற்றும் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இம்மையத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்று பயன்பெறுவர். இறுதியாக வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.