பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் 2,582 ஆக அதிகரிப்பு: டிஆா்பி

Update: 2023-11-17 04:45 GMT

டிஆா்பி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக அதிகரித்து ஆசிரியா் தோவு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோவு அறிவிப்பை ஆசிரியா் தோவு வாரியம் (டிஆா்பி) கடந்த மாதம் வெளியிட்டது.

அதன்படி போட்டித் தோவு ஜனவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசமுள்ளதால் 'டெட்' தோச்சி பெற்ற பட்டதாரிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்த நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோவு வாரியம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News