இராஜேஸ்குமார் எம்.பி நிதியில் பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-09-14 11:55 GMT

பயணிகள் நிழற்கூடம் 

குமாரபாளையம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ராஜம் தியேட்டர் பேருந்து நிறுத்தம், ஆனங்கூர் பிரிவு பேருந்து நிறுத்தம், பள்ளிபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் ஆகிய மூன்று இடங்களில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன் கலந்து கொண்டு பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் கோவெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் அழகேசன், கோவிந்தராஜன், விஜயா கந்தசாமி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், அண்ணமார் கந்தசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜூல்பிகார் அலி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஹரி பாலாஜி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News