ஆடி மாத பௌர்ணமி : எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மனுக்கு ஜெயதுர்கா யாகம்

Update: 2023-08-02 10:50 GMT

ஜெயதுர்கா யாகம்

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மனுக்கு ஜெயதுர்கா யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து ஜெய துர்கா யாகம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு மங்கள மஹா பூர்ணாஹூதியுடன், யாகம் நிறைவு பெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு நடைபெற்ற விழாவில், சுவாமிக்கு 108 லிட்டர் பால், தயிர், கரும்புச் சாறு, உட்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கலசாபிஷேகம் திரிசதி அர்ச்சனை நடைபெற்று, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து, அன்ன படையல் போட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News