கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி தென்னிந்திய தடகள போட்டியில் சாதனை

Update: 2023-09-27 06:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் வேலகவுண்டன்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி சாதனை படைத்துள்ளது.

வித்யபாரதி வித்யாலயா சார்பில், தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டிகள் கேரளா மாநிலம் பாலக்கோட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 19 வயதுக்கு குறைவான மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் ஸ்ரீதர் 100மீ ஓட்டப் போட்டியில் முதலிடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றார். மாணவர் ஜீவ சித்தார்த் 400 மீ., 1500 மீ. ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம், முகேஷ் தட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். 14 வயதுக்கு குறைவான மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி ஜெய்ஷகாவர்ஷிணி தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மணவர் ஸ்ரீதர் மற்றும் மாணவி ஜெய்ஷிகாவர்ஷிணி ஆகிய இருவரும், அடுத்த மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்குபெற, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்த மாணவ மாணவியரை, பள்ளி தாளாளர் டாக்டர் ராஜன், மூத்த முதல்வர் யசோதா, முதல்வர் காயத்திரி, உடற்கல்வி ஆசிரியர் கோபி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

Similar News