பரமத்தி செளராஷ்டிரா சபா சார்பில் கிருஷ்ண ஜெயந்தி, உறியடித் திருவிழா

Update: 2023-09-07 11:18 GMT

கிருஷ்ண ஜெயந்தி, உறியடித் திருவிழா

பரமத்தி சவுராஷ்டிரா சபா சார்பில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடித் திருவிழா நடைபெற்றது.

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் 8 ஆம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில், இவ்விழா கொண்டாடப்படும். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது. அந்நாளில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடப்படுவது வழக்கம்.

மும்பையில் இளைஞர்கள் நாற்கூம்பு அமைத்து தயிர் கலசத்தை எட்டும் நிகழ்ச்சியும், உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை, கிருஷ்ணர் வேடமனிந்த சிறுவர்கள் உடைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். 1982 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கிருஷ்ண ஜெயந்தி நாளை பொது விடுமுறையாக அளித்துள்ளது.

அதன்படி, பரமத்தி செளராஷ்டிரா சபா சார்பில், பஜனை மடத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும், 2 ஆம் ஆண்டு உறியடித்திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மைதானத்தில் நடைபெற்ற உறியடித் திருவிழாவில் பலர் கலந்து கொண்டு, உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பரிசைப் பெற்றுச் சென்றனர். இவ்விழால் செளராஷ்டிரா சமூகத்தினர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News