மத்திய அரசு இந்தியில் கொண்டு வந்த 3 சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

Update: 2023-09-01 07:02 GMT

உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசு இந்தியில் கொண்டு வந்த மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பெடரேஷன் சார்பாக நாமக்கல் ஒருங்கிணைந்த நீதி மன்றத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் கௌரவ செயலாளரும், நாமக்கல் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஆர். அய்யாவு, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் பி.காமராஜ், கூட்டமைப்பின் மண்டல செயலாளர் கே.கே. பாலசுப்பிரமணியம்,நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர். கணேசன், நாமக்கல் மாவட்ட சிவில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் டி. மோகன்ராஜ், ராசிபுரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் என்.செல்வகுமார், பரமத்தி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரபு, திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம். ரவி, திருச்செங்கோடு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பரணிதரன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தலைமை நிலை செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர்கள் எம்.முத்துக்குமார், எம்.நல்லுசாமி, கே.கண்ணன், ராஜரத்தினம், செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ராஜசேகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News