சின்னத்தம்பிபாளையத்தில் மது கடத்தியவர் கைது

Update: 2023-08-16 10:04 GMT

கைது 

சின்னத்தம்பிபாளையத்தில், சுதந்திரதின விழாவிற்கு கூடுதல் விலையில் விற்பனை செய்ய மதுகடத்தியவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் காலை 9 மணிஅளவில், திருச்செங்கோடு அருகே உள்ள, சின்னத்தம்பிபாளையம் பஸ்நிறுத்தம் அருகில் திருச்செங்கோடு மதுவிலக்குத்துறை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ.,செந்தில்குமார் ஆகியோர் வாகனங்களில் யாராவது மதுகடத்தி வருகின்றனரா என்பது குறித்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக டி.வி.எஸ். இருசக்கர வாகனத்தில் வந்த சூரியம்பாளையம் ஆனைமலைகரடு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று சுதந்திர தினவிழாவிற்கு மதுக்கடைகள் விடுமுறை என்பதால், கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்ய 28குவாட்டர் பாட்டில்களை கடத்தி வந்துள்ளார். அவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News