கோயிலில் கலசம் திருட முயற்சித்தவருக்கு ஓராண்டு சிறை நாமக்கல் நீதிமன்றம் அதிரடி

Update: 2023-08-23 05:03 GMT

ஓராண்டு சிறை

நாமக்கல் அருகே கோயில் கலசத்தை திருட முயன்ற நபருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் இருந்து, குரும்பப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள அன்பு நகரில், வேம்படியான் கருப்பண்ண சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், 2016ம் ஆண்டு ஆக. 30 ஆம் தேதி, இரவு, 11 மணிக்கு மர்ம நபர் ஒருவர், கோயில் கோபுரத்தில் இருந்த கலசத்தை திருட முயன்றார். அப்போது அதைக்கண்ட பொதுமக்கள், அவரைப் பிடித்து, மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், கரூர் மாவட்டம், மண்மங்கலம், புது வாங்கலம்மன் தெரு, கோட்டைமேட்டை சேர்ந்த செல்வராஜ் (33) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் மீது, வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு, விசாரணை நாமக்கல் 2வது ஜேஎம் கோர்ட்டில் நடைபெற்றது.

விசாரணை முடிவடைந்து, மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் தீர்ப்பளித்தார். அதில் கோயில் கலசத்தை திருட முயன்ற குற்ற செயலில் ஈடுபட்ட செல்வராஜூக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, செல்வராஜ் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

Similar News