மணிப்பூர் சம்பவத்திற்கு சி.பி.எம். சார்பில் ஆர்ப்பாட்டம்
Update: 2023-07-24 05:33 GMT
மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சி.பி.எம். சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சி.பி.எம். சார்பில் குமாரபாளையத்தில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாத பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசபாண்டியன், நிர்வாகிகள் கந்தசாமி, சன்முகம்,சரவணன், வெங்கடேசன், கார்த்திக் சரவணன், மாதேஷ் உள்பட பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.