தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம்

Update: 2023-08-10 05:56 GMT

அரசு உறுதிமொழி குழு

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு 2023 - 2024 குழுவின் கூட்டம் பொதுவான உறுதிமொழிகள், மாவட்டங்கள் சார்ந்த உறுதிமொழிகள் பேரவைக்கு அளிக்கப்பட்ட குழுவின் முந்தைய அறிக்கைகளில், நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை செயலாளருடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேல்முருகன் தலைமையிலான எம்.எல்.ஏ க்கள், குழு உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம் மற்றும் குழுவினா் அண்ணாதுரை, கருணாநிதி, வில்வநாதன், பழனியாண்டி, சக்கரபாணி, அருள், மோகன், ரூபி மனோகரன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் குழுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு சிறப்பு செயலாளர் ஆ.சுகந்தி, காவல்துறை தலைமை இயக்குனர், காவல் படை தலைவர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவா சிர்வாதம், காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், காவல்துறை தலைவர் (பொது) செந்தில்குமார், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ்குமார், கூடுதல் இயக்குனர் பயிற்சி மற்றும் செயல்பாடுகள் விஜய்சேகர், துணை இயக்குனர் நிர்வாகம் மு.சுந்தர்ராஜ்,

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவல் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறை துணைத் தலைவர் கனகராஜ், சிறைத்துறை துணைத் தலைவர் சென்னை சரகம் முருகேசன், கணக்கு அலுவலர் கோவிந்தராஜ், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் தலைவர் மற்றும் வேளாண்மை இயக்குனர் ஏ. கே.விஸ்வநாதன், முதன்மை பொறியாளர் ஏ.ரவிச்சந்தர், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை ஆணையர் ரத்னா, நிதி கட்டுப்பாடு அலுவலர் சீனிவாசன், இணை இயக்குனர் காளிதாஸ்,

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரக ஆணையர் சண்முகசுந்தரம், இணை ஆணையர் சந்திரசேகர், போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், உதவியாளர் மாதவ குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மேலாண்மை இயக்குனர் விசாகன், பொது மேலாளர் (நிதி) பொன்.கிருஷ்ணதாஸ், தடய அறிவியல் துறை இயக்குனர் பொறுப்பு மகாலட்சுமி, துணை இயக்குனர் சிவப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News