நாமக்கல்லில் மாயமான பிளஸ் 2 மாணவர் தர்மபுரியில் நண்பர் வீட்டில் மீட்பு
நாமக்கல்லில் மாயமான பிளஸ் 2 மாணவர் தர்மபுரியில் நண்பர் வீட்டில் மீட்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் சம்பத், இவரது மகன் தர்சினிக் (16). தர்சினிக் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். அதற்காக, தனது தாயாருடன், நாமக்கல், போதுப்பட்டி லட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த, 4ம் தேதி காலை 70 மணிக்கு, வழக்கும் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் தர்சினிக் மாலையில் வீடு திரும்பவில்லை. மாணவர் திரும்பி வராதால், சந்தேகம் அடைந்த அவரது தாயார், பள்ளிக்கு சென்று விசாரித்தார். காலை 7:20 மணிக்கு பள்ளிக்கு வந்த தர்சினிக், 7:25 மணிக்கு வெளியே சென்று விட்டதாக பள்ளியில் தெரிவித்தனர். அதனால், அதிர்ச்சி அடைந்தவர், அக்கம் பக்கம் மற்றும் தனது மகனின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். எங்கும் காணவில்லை என்பதுடன், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து, நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாயமான மாணவர், கோவை சென்றுள்ளார். அங்கு, இரண்டு நாட்கள் கையில் இருந்து பணத்தை செலவழித்து ஜாலியாக இருந்தள்ளார். பின்னர், பணம் செலவானதும், நேற்று முன் தினம் காலை, அருகில் இருந்தவரின் மொபைல் போனில், நாமக்கல்லில் உள்ள தனது தயாரிடம் தொடர்பு கொண்டு, வீட்டுக்கு வருவதாக கூறி உள்ளார். ஆனால், வீட்டுக்கு வர பயந்து போன மாணவர், நேராக, தர்மபுரியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டார். தகவல் தெரிந்த பெற்றோர், அங்கு சென்று தனது மகனை மீட்டனர்