டெங்கு ஒழிக்கும் பணி துவக்கம் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார்

Update: 2023-09-14 05:37 GMT

டெங்கு ஒழிக்கும் பணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சூரியம்பாளையம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட டெங்கு பணியாளர்களைக் கொண்டு தூய்மை பணி மற்றும் தொட்டி நீருக்கு மருந்து ஊற்றும் பணி ஆகியவற்றை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் அருள்குகன் டெங்கிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விளக்கம் அளித்தார்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகராட்சி சார்பில் சூரியம்பாளையம் பகுதியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்றத் தலைவர் நளினி கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தார். வீடு வீடாகச் சென்று, திறந்திருக்கும் தொட்டிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. தேவையில்லாமல் கிடக்கும் பழைய டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் டெங்கு நோய் பரவாமல் தடுக்கவும், வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விளக்கிக் கூறினார். இதனை அடுத்து திருச்செங்கோடு நகர மன்றத் தலைவர் நளினி டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை முன்மொழிந்தார். பொதுமக்கள் டெங்கு ஒழிப்பு பணியில் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நகர மன்றத் தலைவர் நளினி கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News