நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கேயம் படியூரில், செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின்” வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA - 2) ”பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி (BLA 2) வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி, நகரச் செயலாளர்கள் ராணாஆனந்த், சிவகுமார், பூபதி, ஒன்றிய திமுக செயலாளர் நவலடி, பழனிவேல், கவுதம், ஜெயபிரகாஷ், மாநில நிர்வாகிகள் கைலாசம், நக்கீரன், ஆனந்தகுமார், நகர் மன்ற தலைவர் கலாநிதி, பேரூர் செயலாளர் செல்லவேல், சார்பு அணி அமைப்பாளர்கள் விஸ்வநாத், சித்தார்த், தலைமைக் கழக நிர்வாகிகள்டாக்டர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள் பூவராகவன் சரவணன் சுசீதரன், கண்ணன், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி (BLA - 2) பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.