ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன் தம்பதிக்கு நாமக்கல் சினிமா நடிகர் கோபிகாந்தி வாழ்த்து
கோபிகாந்தி வாழ்த்து
ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பிரர்ஸ் படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியினரை நாமக்கல்லை சேர்ந்த சினிமா நடிகர் கோபிகாந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் கோபிகாந்தி இவர் ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் என்ற சினிமா கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் சமுதாய உணர்வுகள், கண்ணீர் அஞ்சலி, பசு, முயற்சி, டுடே டெக்ஸ்டைல்ஸ் ஆகிய குறும்படங்களை தயாரித்து நடித்துள்ளார். மேலும் முதல் மாணவன், வைர மகன், வீரக்கலை ஆகிய சினிமாப் படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். அதில் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையத்தையும் அவர் நடத்தி வருகிறார். ஆஸ்கார் விருதுபெற்ற தி எலிபெண்ட் விஸ்பரரர்ஸ் படத்தில் நடித்த பொம்மன், பெல்லி தம்பதியினர் ஊட்டி, முதுமலையில் வசித்து வருகின்றனர். அவர்களை நாமக்கல் சினிமா நடிகர் கோபிகாந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் சினிமாப்பட இயக்குனர் பாலபாரதியும் கலந்து கொண்டார்.