நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு

Update: 2023-09-13 11:41 GMT

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டிற்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும், வாழ்நாள் முழுவதும் ஓயாது பாடுபட்ட உத்தமர் - பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளான நாளை செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மோகனூர் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு நகர செயலாளர்கள் செ.பூபதி, அ.சிவக்குமார், ராணா ஆர்.ஆனந்த், நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, நாமக்கல் ஒன்றிய செயலாளர் வி.கே.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும், மற்ற இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அது சமயம் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News