நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கல்லூரி பேரவை துவக்க விழா பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு

Update: 2023-08-22 12:02 GMT

துவக்க விழா 

நாமக்கல் திருச்சி ரோட்டில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4,000 மாணவியர் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி பேரவை துவக்க விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு பேரவையை துவக்கி வைத்து, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவியர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுதிமொழி வாசித்து பதவி பிரமாணம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் இயற்பியல் பேரவை தலைவர் மற்றும் பேரவை பொறுப்பு முனைவர் ரா.சித்ராதேவி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் கல்லூரி பேரவை தலைவராக (இளநிலை) ஜி.தர்ஷினி பேரவை துணைத் தலைவராக வி.ஹர்ஷினி, பேரவை செயலாளராக எஸ்.அனுராதா, இணை செயலாளராக கே.காயத்ரி, பொருளாளராக கே.நந்தினி, பேரவை விளையாட்டு செயலாளராக எம்.விசாலி, பேரவை நுண்கலை மன்றச் செயலாளராக என்.இந்துமதி, கட்செவி புலச்செயலாளர் எஸ்.மீனா, கல்லூரி பேரவை தலைவி (முதுகலை) எஸ்.ஸ்ரீ வைஷ்ணவி, பேரவை செயலாளர் (முதுகலை) பி.அக்ஷயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரையும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவா் மா.கோவிந்தராசு மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழா இறுதியாக மாணவியர் பேரவை தலைவி இளநிலை இயற்பியல் மூன்றாமாண்டு செல்வி ஜி தர்ஷினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News