நாமக்கல் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

Update: 2023-09-04 09:33 GMT

நல்லாசிரியர் விருது

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய/ மாநில அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்த வகையில் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை கூச்சிக்கல்புதூர் செல்லப்பா காலனி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கா.செல்வராணி 2023 ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி உள்ளார்.

Tags:    

Similar News