சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தேசிய கார்னுகோபியா ஆங்கிலப் புலமை மாநாடு

Update: 2023-09-22 06:20 GMT

ஆங்கிலப் புலமை மாநாடு

சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்ஙமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான ஆங்கிலப் புலமை மாநாடு விவேகானந்தா கலையரங்கத்தில் நடைபெற்றது.

‘கார்னுகோபியா கல்சர், கிரியேட்டிவிட்டி மற்றும் இன்னோவேஷன்’ என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆங்கிலப் புலமை மாநாட்டிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர், செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கேரளா ஸ்டெண்ட் ஆல்ஃபர்ட் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் நிஷாதாமோஜி வரக்கீஸ், கோவை பாரதியார் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டார். ஆங்கிலத்துறையின் தலைவர் பேராசிரியர் சண்முகப்பிரியா வரவேற்புரை ஆற்றினார்.

ஆங்கிலப் புதுமை, புலமை ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்துத் துறை மாணவிகளின் படைப்பாற்றல் அடங்கிய கார்னுகோபியா இலக்கிய இதழ் வெளியிடப்பட்டது. கார்னுகோபியா இதழை கேரளா ஸ்டெண்ட் ஆல்ஃபர்ட் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் நிஷாதாமோஜி வர்க்கீஸ் வெளியிட்டார். முதல் பிரதியை விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கேரளா ஸ்டெண்ட் ஆல்ஃபர்ட் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் நிஷாதாமோஜி வரக்கீஸ், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பத்மநாபன் ஆகியோர் தங்கள் சிறப்புரையில், ‘தமிழ்ப்பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போல் சர்வதேச மொழியான ஆங்கிலத்தில் தமிழ் சமுதாயம் புதுமை மற்றும் புலமை பெற வேண்டும். ஆங்கில புலமை வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த உதவும். கல்லூரி மாணவர்கள் நிச்சயமாக ஆங்கிலக் கலாச்சாரத்துடன் கூடிய புதுமை மற்றும் புலமை பெற்று படிப்பில் மட்டுமல்லாமல் தங்கள் எதிர்கால சந்ததியின் முன்னேற்றத்திற்கும் முன் உதாரணமாக விளங்க வேண்டும். புதுமைக் கருத்துக்கள் ஆங்கில மொழியில் புதைந்து கிடக்கின்றன. அவற்றைச் செம்மைபடுத்தி வாழ்க்கையில் செழுமையடைய வேண்டியது நமது கடமை” என்று குறிப்பிட்டார்.

தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி, விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், துறைத்தலைவர்கள் துறைத்தலைவர்கள் பேராசிரியர் சண்முகப்பிரியா, டாக்டர் மைதிலி, பேராசிரியர் பிரபுக்குமார், டாக்டர் பிரபாகரன், டாக்டர் மெய்வேல், பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் கலைவாணி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் சுபராஜா மற்றும் பேராசிரியர் கருப்புசாமி ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். தேசிய மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை மாணவியர் அமைப்பினர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Tags:    

Similar News