ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா
பள்ளிபாளையத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு கிளை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 34ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நவரத்தின விழா கிளை செயலர் லோகநாதன் தலைமையில் நடந்தது. மத்திய மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் சங்க கொடியேற்றி வைத்தார். சுமதி, நிர்மலா குத்துவிளக்கேற்றினர். கிளை தலைவர் சேகர் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் ஜெகதீஷ், மாவட்ட தலைவர் பிரபு,முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, கள்ளிந்திரி முதியோர் இல்லத்திற்கு இலவச வேட்டி சேலை, சபரிமலையில் சேவை செய்த தொண்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார்கள். கவுன்சிலர்கள் வேணுகோபால், கவிதா, நிர்வாகி லட்சுமிநாராயணன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.