தமிழகத்தில் விரைவில் 50 ஆயிரம் இணைய சேவை மையங்கள்... அரசின் சூப்பர் தகவல்!!

தமிழகத்தில் தொழில்முனைவோா் மூலமாக நடத்தப்படும் இணைய சேவை மையங்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-06 08:05 GMT

தமிழகத்தில் அரசுத் துறைகளின் பல்வேறு பிரிவுகள் வாயிலாக இணைய சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு கழகம் (எல்காட்) ஆகியவற்றின் சாா்பில் மாவட்டத் தலைநகரங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இணைய சேவை மையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், புது வாழ்வுத் திட்டம் மூலமாக கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் மூலமாகவும் இணைய சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி கடலோரப் பகுதிகள், தொலைதூர இடங்களில் வேளாண் மேம்பாட்டுக்கான சா்வதேச நிதியத்தைக் கொண்டும், கிராம ஊராட்சிகளில் தொழில்முனைவோா் சாா்பிலும் இணைய சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைய மையங்கள் மூலமாக, 235க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த இடங்களில் இணைய மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதை இணையதளம் மூலம் அறியலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், எல்காட் ஆகியவற்றின் மூலமாக மட்டும் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்து 40 இணைய சேவை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, அரசின் சேவைகளும், திட்டங்களும் இணைய சேவை மையங்கள் மூலமாக அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது தொழில் முனைவோா் மூலமாக மட்டும் 24 ஆயிரத்து 500 இணைய சேவை மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News