பேருந்துகள் செல்லும் வழித்தடத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் நகரில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு கடந்த 21. 1.1991 ஆம் ஆண்டு அன்றைய காலத்தில் டிஎஸ்பி தமிழ்ச்செல்வன் தலைமையில் குழு அமைத்து ஒன் வே எனப்படும் ஒரு வழிச்சாலை அமைத்து சில மாதங்கள் நடைமுறைப்படுத்தி அதனை சரிபார்த்த பின் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல், சேலம் ,செல்வதற்கு பழைய பஸ் நிலையம் வழியாக வந்து செல்ல முடிவெடுக்கப்பட்டு அதனை நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி இருந்தது. இது கடந்த 31 ஆண்டுகள் நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை மாற்றி ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், ஈரோடு, செல்ல ஆத்தூர் ரோடு வழியாக வந்து பின் டிவிஎஸ் சாலை ரோட்டில் திரும்பி பூவாயி அம்மாள் திருமண மண்டபம் வழியாக பட்டணம் சாலை வந்தடைந்து பின்பு ஹவுஸிங் போர்டு ரோடு வழியாக கிருஷ்ணா தியேட்டர் பகுதிகள் திரும்பி பின்பு சிவானந்தா சாலை வழியாக வந்து சேலம் செல்வதற்கு ஒரு புறமும் அதே ரோட்டில் நாமக்கல், மற்றும் ஈரோடு செல்ல வேண்டிய இருப்பதால் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பஸ் நிலையத்தில் நேர பிரச்சனை ஏற்படும். இது போன்ற தொந்தரவுகளால் பொதுமக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் ஆளுங்கட்சியினர் தன்னிச்சையான முடிவு எடுத்து இதை காவல்துறையிரை வைத்து செயல் படுத்தியுள்ளனர்.
எனவே இதனை உடனடியாக சரி செய்து பழையபடி பஸ் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் இதனை செயல்படுத்த காலதாமதம் ஏற்படும் சூழலில் அதிமுக சின்னம்மா அணி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
இந்தப் பாதையை மாற்றம் செய்யும்போது எவ்வித கருத்து கேட்பு கூட்டமும் பொதுமக்களையும், வணிகர்களையும், மாணவர்கள், பெண்களையும் கேட்டு அறிந்து செயல்படாமல் ஆளுங்கட்சி நபர்கள் முக்கிய பிரமுகர்களை கலந்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டு பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதால் பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த செயல்பாடுகள் பொதுமக்களின் நன்மைக்காக இதனை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் ஆளுங்கட்சியினர் இதனை தங்கள் வீட்டில் செயல்பாடுகளை மாற்ற அமைப்பது போல அவர்கள் சௌகரியத்திற்கு செயல்படுத்தி வருகின்றனர்.
எனவே இதனை விரைவில் சரி செய்து பொதுமக்களை நன்மைக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இதனை உடனடியாக செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரையும் கோட்டாட்சியர் அவர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஆளுகின்ற திமுக அரசு இதனை கருத்தில் கொண்டு நன்கு விசாரித்து இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அதிமுக சின்னம்மா அணி நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர் கே .என். கோபால், மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.