நாளை 23 ந் தேதி தமிழறிஞர் செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் திறப்பு விழா

காணொளி வாயிலாக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து மலர் வெளியிட்டுகிறார்.

Update: 2023-09-22 07:10 GMT

சிலை மற்றும் அறிவகம் திறப்பு விழா

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை நடத்தும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் திறப்பு விழா நாளை 23 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள சிவியாம்பாளையம் கொண்டம்பட்டிமேடு சிலம்பொலியார் நகரில் நடைபெறுகிறது.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோர் அருளுரை வழங்க உள்ளனர் விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் வரவேற்புரை ஆற்ற உள்ளார். பி.ஜி.பி குழுமத் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி தலைமை தாங்குகிறார்.

விழாவில் வனத்துறை அமைச்சர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி, பரமத்தி வேலூர் ச.சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் திருவுருவச் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை காணொளி வாயிலாக கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து மலர் வெளியிட்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

விழாவில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் இளங்கோ விருது மற்றும் ஒரு லட்சம் பொற்கிழியை சிலம்புச்செம்பல் புலவர் தமிழமுதன் பெறுகிறார். தமிழறிஞர்கள் முனைவர் மா.ராஜேந்திரன், முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். இறுதியாக சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை செ.கொங்குவேள் நன்றி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளை கவிஞர் தமிழன் ராகுல்காந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

அறிவகத்திற்கு சிவியாம்பாளையம் பூங்கோதை செல்லதுரை நிலம் வழங்கி உள்ளார். சிலை அமைப்பு குழு தலைவர் சு.குமாரசாமி, செ.ராஜேந்திரன், வை.சித்தார்த்தன், செயற்குழு உறுப்பினர்கள் சி.கா.செல்லப்பன், இரா.வெங்கடாசலம் ப.சம்பத்குமார், சி.கா.பழனிசாமி, மு.சேரலாதன், பூங்கோதை செல்லதுரை, இரா.அன்பழகன், ஆ.செல்வராஜ், சு.பெரியசாமி மற்றும் சிவியாம்பாளையம் ஊர் பொதுமக்கள், சிலம்பொலியாரின் சீர்மிகு மாணவர்கள், தமிழன்பர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியோர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இவ்விழாவில் சிலம்பொலி செல்லப்பன் இல்லத்தினர் நா.புட்பராசு, முனைவர் மணிமேகலை, குமாரவடிவு செ.தொல்காப்பியன், கு.இராமலிங்கம், மருத்துவர் கௌதமி, செ.கொங்குவேள், மருத்துவர் ஈஸ்வரி மருத்துவர் செ.ராமகிருஷ்ணன், நகைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News