ஆர்.புதுப்பாளையத்தில் யாதவர் சமூகத்தின் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா
Update: 2023-09-07 11:23 GMT
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா
இராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் யாதவர் சமூகத்தின் சார்பில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணர் திருவுருவ சிலை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக சென்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் திருக்கோவிலை அடைந்தது. ஊர்வலத்தின் ஒரு வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரும், மற்றொரு வாகனத்தில் கண்ணன் ராதை வேடம் அணிந்த குழந்தைகளும் காட்சியளித்தனர். ஊர்வலத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யப்பட்டு அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.