"எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்பு

Update: 2023-09-06 06:20 GMT

"எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" நிகழ்ச்சி 

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் "பள்ளித் தூய்மை உறுதிமொழி" எடுத்து கொண்டனர். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, ஆசிரியர்கள், மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள 37,574 அரசுப் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பல முக்கிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.  பள்ளிகளில் தூய்மையான வகுப்பறை மற்றும் வளாகம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான கழிவறைகள் தொடர்பாக அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து, பள்ளிகளில், "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற விரிவான மற்றும் நிலையான தூய்மைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலின் மதிப்புகளை புகுத்துவதற்கும் மீண்டும் வலியுறுத்துவதற்கும் இந்த திட்டத்தில் அடங்கும் - தனிப்பட்ட சுகாதாரம், பள்ளிகளில் பசுமையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கழிவு மேலாண்மை நடைமுறைகள், பள்ளி காய்கறி தோட்டம், மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம் , பிளாஸ்டிக் இல்லாத வளாகம் மற்றும் மாற்று வழிகளை நோக்கி அவர்களை இத்திட்டம் ஊக்குவிக்கும். 

இத்திட்டத்தின்படி, பள்ளி மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் "பள்ளித் தூய்மை உறுதிமொழி" எனும் தலைப்பில்  "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன். எனது பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையினை ஏற்படுத்த மாட்டேன். மேலும். எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். எனது பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்பணித்துக் கொள்வேன். எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழுமனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள். உறவினர்கள். சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன். மேலும், எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News