பாவை பொறியியல் கல்லூரி பைதான் ப்ரோகிராமிங்கில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை
இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்
பாவை பொறியியல் கல்லூரியில் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிப்பதற்காக கூகுள் டெவலப்பர் மாணவ அமைப்பின் சார்பாக, சிறப்பு பைதான் ப்ரோகிராமிங் நிகழ்வு, ப்ரோகிராமர்ஸ் டே… என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த பைதான் ப்ரோகிராமிங் மூலம் சமூக விழிப்புணர்வு குறுஞ்செய்திகள் தொடர்ந்து நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவெளியின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா துவங்கியது. விழாவினை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராக இந்தியா புக் ஆப் ரெக்கார்டின் பொறியியலாளர் எஸ்.சகாயராஜ் கலந்து கொண்டார். இந்தியாவில் கூகுள் டெவலப்பர் மாணவ அமைப்பின் ரீஜினல் தலைமை செல்வி. நிகிதா காந்தி மற்றும் செல்வி. தன்வி சோமனி ஆகியோர் இணைய வழியில் மாணவரூபவ் மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றி, நிகழ்ச்சியினை சிறப்பாக வழிநடத்தும் பாவை கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணவரும், பாவை பொறியியல் கல்லூரி கூகுள் டெவலப்பர் மாணவ அமைப்பின் தலைமையுமான செல்வன். எஸ்.விக்ரம் ராஜா வரவேற்புரை ஆற்றினார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், ’உற்சாகம் ததும்பும் மாணவ, மாணவிகளாகிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். கணினி மாணவர்களாகிய நீங்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிப்பதற்காக முனைப்புடன் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது பெருமிதமளிக்கிறது. இந்நிகழ்ச்சியானது மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், புதுமையான எண்ணங்களையும் வெளிப்படுத்தவும், சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தக்க தளமாக அமைந்துள்ளது. மேலும் அவற்றை கணினி ப்ரோகிராமிங்காக மாற்றி சமூகத்திற்கு பயனளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. நீங்கள் அனைவரும் சிறந்த ஈடுபாடு, பங்களிப்பு மற்றும் அர்பணிப்புடன் சாதனை மாணவர்களாக உயர, உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்று பேசினார். தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் நடுவர் முடிவினை அறிவித்தார். மாணவ, மாணவிகளின் தொடர் முயற்சியால் பாவை பொறியியல் கல்லூரி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இறுதியாக உயிர் மருத்துவப் பொறியியல் துறை இறுதியாண்டு மாணவி செல்வி. எம்.ஜே.சபா பரீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.