நாமக்கல்லில் திமுக வினர் அமைதி ஊர்வலம்

Update: 2023-08-07 12:10 GMT

அமைதி ஊர்வலம் 

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்.நாமக்கல்லில் திமுக வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி நாமக்கல்லில் சட்ட மன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் தலைமையில் மாவட்ட அவை தலைவர் மணிமாறன் முன்னிலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் நேதாஜி சிலை அருகே இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் நாமக்கல் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவுத்தூண் வழியாக நாமக்கல் கடைவீதி மற்றும் நாமக்கல் அண்ணா பேருந்து நிலையம் மணிக்கூண்டு வழியாக வந்து மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே முடிந்தது

Advertisement

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், நகர திமுக செயலாளர்கள் ராணாஆனந்த், பூபதி, சிவக்குமார், நகர் மன்ற தலைவர் கலாநிதி, மாநில நிர்வாகிகள் நக்கீரன், ஆனந்தகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பரிதி, மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News