கல்குவாரி அனுமதியை நிறுத்த கோரி மக்கள் போராட்டம்
பொதுமக்களுக்கு இடையூரான கல்குவாரி அனுமதியை நிறுத்த கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட முயன்ற கிராம மக்கள்
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:21 GMT
திருவளக்குறிச்சி பாடாலூர் ஆகிய பகுதியில் உள்ள குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுப்பதால் நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வெடிபொருள் கலந்த தண்ணீர் இருப்பதால் மக்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் கிட்னி பிரச்சனைகள் வருவதாகவும், மேலும் அதிகமான வாகனங்கள் செல்வதால், புழுதி ஏற்ப்பட்டு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது,, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆகவே கல்குவாரி வாகனங்களை அதிகமாக இருப்பதை குறைத்து வாகனம் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கி தர வேண்டும். மேலும் கல்குவாரி புதிய அனுமதி மற்றும் ஏலத்தை நிறுத்த வேண்டும். என பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கல்பாடி எறையூர், திருவளக்குறிச்சி, பாடலூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் , திருவளக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட முயன்றுள்ளனர் இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலுர் மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் அவர்களை சாலை மறியலில் ஈடுபடவிடாமல் தடுத்து நிறுத்தினர் இதனை அடுத்து திருவளகுறிச்சி பிரிவு சாலை பகுதியில் சாலையில் அமர்ந்து, கோரிக்கையுடன், போலீசாரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுட்டனர், இதனையடுத்து போரட்டம் செய்தவர்களிடம் ஆலத்தூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.