தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி “சமூக நீதி நாள்” உறுதிமொழி
அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில் ஏற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி எண்-110-ன் கீழ் அறிவிக்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செம்படம்பர் 17 ஆம் நாள் அரசு விடுமுறையின் காரணமாக இராசிபுரம் வட்டம், சுஜிதா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) ஆகியோர் முன்னிலையில்
“சமூக நீதி நாள்” உறுதிமொழி என்ற தலைப்பில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் - ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும்,எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன் ! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் ! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன் ! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளி பெருமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், நாமக்கல் வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்கள் (இணைபதிவாளர்) த.செல்வகுமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், பேரூராட்சி தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ் (வெண்ணந்தூர்), ரா.போதம்மாள் (பட்டணம்), பொ.சுமதி (ஆர்.புதுப்பட்டி), கொ.லோகாம்பாள் (சீராப்பள்ளி), இராசிபுரம் வட்டாட்சியர் சு.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.