பா.ம.க. நிறுவனர் பிறந்த நாள் விழா

Update: 2023-07-27 11:19 GMT

பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் பா.ம.க. நிறுவனர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா குமாரபாளையத்தில் நகர செயலர்கள் கோவிந்தன், செந்தில் தலைமையில் நடந்தது. இதில் வாசுகி நகர் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் மையங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், நிர்வாகிகள் சவுந்தர்ராஜன், சுப்ரமணி, சிவராம், கார்த்தி, ரவிக்குமார், சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News