குமாரபாளையத்தில் கார் விற்பதில் கைகலப்பு போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் கார் விற்பதில் கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையத்தில் பழைய டூவீலர்கள், கார்கள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. பல ஊர்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து வாகனங்களை வாங்கியும், விற்றும் செல்கின்றனர். இங்கு கார் விற்பனை செய்ய வந்த இடத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:
குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் பழைய கார் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகிகளான ராஜ்குமார், 32, அம்சழகன், 35, ஆகியோரிடம், ஈரோட்டை சேர்ந்த மதன்குமார், 35, யாசின், 36, ஆகியோர் தங்களது மகேந்திரா எக்ஸ்.யு.ஒய்.காரை விற்பனை செய்து தரச்சொல்லி கேட்கின்றனர். குமாரபாளையம் தரப்பினர் ஈரோடு சென்று காரை எடுத்து வந்து விற்பனை செய்ய முயற்சி செய்கின்றனர். இதனை வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்ட தொகை விலை பேசி, 25 ஆயிரம் முன்தொகை கொடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் குமாரபாளையம் வந்த ஈரோடு தரப்பினர் காரை எடுத்து செல்வதாக கூற, இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிகிறது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் இரு தரப்பினரையும் போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையம் தரப்பினர் அ.தி.மு.க. கட்சியயை சேர்ந்தவர்கள் என்பதால் போலீஸ் ஸ்டேஷன் முன்பு அக்கட்சியினர் பெருமளவில் திரண்டனர்./ ஈரோட்டை சேர்ந்த மற்றொரு தரப்பினரும் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் கூட்டம் மேலும் அதிகரித்தது. அவ்வழியே சென்ற பொதுமக்களும் கூட்டத்தை பார்த்ததும் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். போலீசார் கூட்டத்தை விரட்டியடித்தனர்.