விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர் பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்
வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க உள்ள சிறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவிகிதம், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியத்தினாலான பவர் டில்லர்களை 5000 விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.
இதன் அடிப்படையில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல், மோகனூர், புதுச்சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 20 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.கே.பழனிவேல், பெ.நவலடி, ஏ.பி.ஆர்.சண்முகம், எம்.பி.கௌதம், ஆர்.ஜெயப்பிரகாஷ், மாவட்ட கழக துணைச் செயலாளர் நலங்கிள்ளி, ஒன்றிய குழுத் தலைவர்கள் சரஸ்வதி கருமணன், சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவர் ராம்குமார், மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார், வட்டார வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்கள் தங்கராஜன், சாந்தி, சிவசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், அசோகன், மாரியப்பன், மகாலட்சுமி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.