நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா
இந்திய பேரரசின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு வாரம் மக்கள் சேவை வாரமாக கொண்டாப்பட்டு வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P. சத்தியமூர்த்தி ஆலோசனை படி நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சீரப்பள்ளி பேரூர் ஆதிதிராவிடர் காலனி பகுதி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலும் மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அரசு நலத்திட்டங்கள் மற்றும் மோடி அவர்களின் ஒன்பது ஆண்டு காலம் ஏழை எளிய கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் தெளிவாக எடுத்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் RP. தமிழரசு, SC அணி மாவட்ட பொதுச்செயலாளர் கந்தசாமி, sc அணி மாவட்ட துணை தலைவர் k.அருள்குமார், பொதுச்செயலாளர் மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள். இரத்தினம், குமரேசன், தனபால், மனோஜ், கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.