ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

Update: 2023-08-07 12:01 GMT

பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

எலச்சிபாளையத்தில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட, வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி, மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம், எலச்சிபாளையம் உள்ளிட்ட அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி, வகுப்பறை மேலாண்மை மற்றும் அதில் பெற்றோர்களின் பங்கு குறித்து கருத்தாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் சந்தோஷம், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேல், வெங்கடாசலம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் பயிற்சியை ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி குறுவள மையங்களை பார்வையிட்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார். இப்பயிற்சியில் 143ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News