புதுப்பட்டி அருள்மிகு குபேர லிங்கேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

Update: 2023-08-21 06:47 GMT

திருக்குட நன்னீராட்டு பெருவிழா

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், N.புதுப்பட்டி வடக்குமேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் அருள்தரும் சொர்ணாம்பிகை நந்திதேவர், பைரவர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கையம்மன், நவகோள்கள் ஆகிய தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

கொங்கு வளநாட்டில், திருஆரைக்கல் எனும் நாமக்கல்லில் அருள்தரும் சொர்ணாம்பிகை அம்மை அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில் பல ஆண்டுகளுக்கு முன் வல்வில் ஓரி மன்னனால் கட்டப்பட்டது என பேச்சு வழக்கில் பேசப்பட்டுவரும் ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு பல ஆண்டுகளாக கூரை அமைத்து வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோயிலானது விரிவாக்கத் திருப்பணிகள் செய்யப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அது சமயம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்மை ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் அருள் பெற்றனர். வேள்வி பணியில் ஏகாம்பரநாதர் சிவனடியார் திருக்கூட்டம் வேல்முருகன் தலைமையில் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். ஸ்ரீ குபேர ஈஸ்வரர் அறக்கட்டளை ஸ்ரீ குபேரலட்சுமி ஆலய அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன், துணைத்தலைவர் எஸ். செல்வம். நிர்வாக கமிட்டி செயலாளர் ஓ. பூமிசேகரன், துணை செயலாளர் பி.சசிகுமார். பொருளாளர் பி. ஆர். வெங்கடாசலம், துணை பொருளாளர் வி. சின்னுசாமி (எ) சின்னகுமார், மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் இதற்க்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Tags:    

Similar News