ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

Update: 2023-09-04 09:37 GMT

குடமுழுக்கு விழா

ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோவில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில் திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆக.23-ல் இதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டன. ஆக.31-ல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோமாதா பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நடைபெற்றது. செப்.1-ல் புண்ணிய நதி தீர்த்தம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக அழைத்து வருதல், முதல்காலயாக பூஜை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்களால் வாசனை திரவியங்கள் கொண்டு ஆகம முறைப்படி செப்.2-ல் 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4-ம் கால யாகபூஜை தொடங்கப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க அர்ச்சகர்களால் கோவில் கலசங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவினை வேதமுறைப்படி சிவாச்சாரியார்கள் , ஆலய அர்ச்சகரக்ள் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

இதே போல் சிங்களாந்தபுரம் சின்ன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் எடுத்துவரப்பட்டது. முளைப்பாரி ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்று யாகசாலை பூஜைகள் நடந்தது.பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலைமையில் கோயில் வளாகத்தில் சுற்றிவரப்பட்டு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர்ஊற்றப்பட்டது. அவனைத் தொடர்ந்து மகா ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News