ராகுல்காந்தி பாராளுமன்றம் செல்ல தீர்ப்பு-காங்கிரசார் கொண்டாட்டம்
காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Update: 2023-08-05 10:22 GMT
எருமப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் இருந்து விடுவித்து மீண்டும் பாராளுமன்றம் செல்ல அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் இந்தியா என்ற கூட்டணிக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதி எருமப்பட்டி ஒன்றிய காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு எருமப்பட்டி வட்டார தலைவர் தங்கராஜ் தலைமையிலும் மற்றும் வட்டார செயலாளர் சீனிவாசன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணியம்மாள் செயலாளர் முருகேசன் எருமப்பட்டி நகர துணை தலைவர் ராமஜெயம் இளைஞர் காங்கிரஸ் செந்தில்குமார் செல்வகுமார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.