ராமநாதபுரம் காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-21 11:39 GMT
ராமநாதபுரம் உலக காச நோய் தினம் முன்னிட்டு ஆம் நம்மாள் டிபியை ஒழிக்க முடியும் என்ற இந்த வருட மையக் கருத்தை வலியுறுத்தி காச நோய் விழிப்புணர்வு பேரணியை பிளாசம் தொண்டு நிறுவனம். ராமநாதபுரம் Skating Roll Ball அசோசியேசன் மற்றும் மெலனு ஸ்கேட்டிங் அக்டாமி இணைந்து ஸ்கேட்டிங் பேரணியை ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் கொடியாசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட இராமநாதபுரம் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குனர் டாக்டர் டி கே ரமேஷ் எம்பிபிஎஸ் வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஸ்கேட்டிங் பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை சென்று இராமநாதபுரம் இசிஆர் ஜங்ஷன் நிறைவடைந்தது. பின்னர் தங்கச்சிமடம் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் நினைவிடத்தில் அவருடைய பேரன் ஏ பி ஜே சலீம் குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் சென்றபோது காசநோய் குறித்து விழிப்புணர்வு கோஷங்களையும் பதாகைகளை ஏந்தியும் பேரணியில் சென்றனர்.