ராசிபுரம் அரசு பணிமனை ஓய்வறை எம்.பிக்கள் இராஜேஸ்குமார் சின்ராஜ் திறந்து வைத்தனர்
பணிமனை ஓய்வறை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (சேலம் ) கிளையான ராசிபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் புதிதாக மூன்று குளிரூட்டும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஓட்டுனர் நடத்துனவர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒய்வறை கட்டிடத்திற்க்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வர்ணம் பூசி புதுப்பித்து கொடுத்தார்.
புதிதாக கட்டப்பட்ட ஓய்வறையை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும். மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஷ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட திமுக பொருளாளர் ஏ.கே.பாலச்சந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் D.S.சந்திரசேகர், மாவட்ட கொமதேக செயலாளர் A.P.செல்வராஜ், சேலம் மண்டல மேலாளர் பொன்முடி, தீரன் தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.