இரும்பு கழிவு வாகனங்களால் வாலாஜாபாதில் விபத்து அபாயம்
இரும்பு கழிவு ஏற்றி வரும் வாகனங்களால் வாலாஜாபாதில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
By : King 24x7 Website
Update: 2023-10-25 09:27 GMT
வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரயில்வே பாலம், வாலாஜாபாத் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் ஏற துவங்கி, துணை மின் நிலையம் அருகே, இறங்குகிறது. இரும்பு கழிவுகளை ஏற்றி செல்லும் ஓவர் லோடு வாகனங்கள், தார்பாலினால் மூடாமலும், கயிறு போட்டு கட்டாமலும், எடுத்து செல்வதால், சிதறுகின்றன. இதனால், லாரியை பின் தொடர்ந்து செல்பவர்கள், வாகன விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இரும்பு கழிவுகளை எடுத்து செல்லும் போது, தார்பாலினால் மூடி எடுத்து செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் கூறுகையில், 'ஓவர் லோடு மற்றும் தார்பாலின் கொண்டு மூடாமல் எடுத்து செல்லும் வாகனங்களை அவ்வப்போது சோதனை செய்து, அபராதம் விதிக்கிறோம். இனி, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.