சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் 2 நாள் அழகுக் கலை பயிற்சி முகாமில் அழகுக்கலை வல்லுநர்கள் சிறப்புரை

‘குப்பைமேனி மூலிகை, மேனி அழகினை பாதுகாக்கும்’ ‘ஆயுர்வேத மூலிகைச் சாறு பக்கவாதங்களை குணப்படுத்தும்’

Update: 2023-07-10 10:12 GMT

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான

விவேகானந்தா கலை மற்றும் அறிவியியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல்

பேஷன் டிசைனிங் மற்றும் காஸ்டியூம் டிசைனிங் பேஷன் துறைகளின் சார்பில் 2

நாள் அழகுக் கலை பயிற்சி முகாம் இன்று துவங்கியது. பயிற்சி முகாம் துவக்க

விழாவிற்க விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின்

நிறுவனர் மற்றும் தாளாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை

தாங்கினார். சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி வரதராஜீ, கல்லூரி

முதல்வர் டாக்டர் சுரேஷ்குமார், டெக்ஸ்டைல் பேஷன் டிசைனிங் மற்றும்

காஸ்டியூம் டிசைனிங் பேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர்

சி.கே.இரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர்

முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அழகுக் கலை நிபுணர் தாட்ஷாயிணி, வினோயா

காஸ்மட்டிக் நிபுணர் விவேக், மத்திய அரசின் நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் பஞ்சாப்

மருத்துவ கல்லூரி பிட்னஸ் மருத்துவ பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்னர்.

அழகுக் கலை நிபுணர் தாட்ஷாயிணி 12 வகையான அழகுக் கலைகளை

மாணவிகளுக்கு செய்முறையில் கற்பித்தார். வினோயா காஸ்மட்டிக் நிபுணர்

விவேக், ‘குப்பைமேனயில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை சோப், சீகக்காய்

போன்ற இந்திய பாரம்பரிய மூலிகைகளை இளம் பெண்கள் தங்கள் அன்றாட

வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்; இரசாயனம் கலந்த காஸ்மட்டிக்

பொருட்களை மாணவிகள் தவிர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். பிட்னஸ்

மருத்துவ பயிற்சியாளர் ரமேஷ், “ஆயுர்வேத மூலிகைச் சாறு பயன்படுத்தி உடல்

அங்கங்களில் ஏற்படும் பக்கவாத பிரச்னைகளை முழுமையாக தீர்க்கலாம்” என்று

குறிப்பிட்டார். இந்த பயிற்சி முகாமில் விவேகானந்தா கலை அறிவியல் மகளிர்

கல்லூரியின் டெக்ஸ்டைல் பேஷன் டிசைனிங் மற்றும் காஸ்டியூம் டிசைனிங்

பேஷன் துறைகளின் மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 1,700 பேர் பங்கேற்றனர்.

மாணவிகள் பயிற்சி முகாமில் கற்றுத் தரப்பட்ட அழகுக் கலைகளை செய்முறையில்

அவர்களே செய்து பார்த்தனர். மிகச் சரியாக அழகுக் கலை கற்ற மாணவிகளுக்கு

காஸ்மட்டிக் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பயிற்சி முகாமில் கலந்து

கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.‘குப்பைமேனி மூலிகை, மேனி அழகினை பாதுகாக்கும்’

‘ஆயுர்வேத மூலிகைச் சாறு பக்கவாதங்களை குணப்படுத்தும்’‘குப்பைமேனி மூலிகை, மேனி அழகினை பாதுகாக்கும்’

‘ஆயுர்வேத மூலிகைச் சாறு பக்கவாதங்களை குணப்படுத்தும்’‘குப்பைமேனி மூலிகை, மேனி அழகினை பாதுகாக்கும்’

‘ஆயுர்வேத மூலிகைச் சாறு பக்கவாதங்களை குணப்படுத்தும்’

Similar News