குமாரபாளையத்தில் கொங்கு பவர்லும் சங்க மகாசபை கூட்டம்
குமாரபாளையத்தில் கொங்கு பவர்லும் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் கொங்கு பவர்லும் உரிமையாளர்கள் சங்க 51 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடந்தது.
மின்சாரக் கட்டணம், தற்போது உயர்ந்துள்ள நிலைக்கு முன்பிருந்த நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நூல் விலை உயர்வை குறைந்த பட்சம் ஒரு முறை உயர்த்தப்பட்ட விலை உயர்வு ஒரு ஆண்டுக்கு மீண்டும் உயர்த்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆடி மாதம் போதிய ஆர்டர் இல்லாததால், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளதால், அவைகளை அரசு சார்பில் கொள்முதல் செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி ரகங்கள் எவை, எவை என்பதை தெளிவுபடுத்தி, அதனை அரசு ஆணையாக அறிவித்து, அடிக்கடி விசைத்தறியில் உற்பத்தி செய்யும் ரகங்களை, கைத்தறி ரகங்கள் என கைது செய்தல், அபராதம் விதித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவர் சங்கமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பங்கேற்று பேசிய சிட்ரா தலைவர் பன்னீர்செல்வம், விசைத்தறி தொழில் வளர்சிக்கு தேவையான அனைத்து உதவிகளை சிட்ரா எப்போதும் செய்து தரும், என்றார். செயலர் சுந்தர்ராஜ், பொருளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, துணை தலைவர்கள் குமாரசாமி, தம்பி, அத்தியண்ணன், துணை செயலர்கள் பெருமாள், செங்கோட்டுவேலு, தங்கவேல், துணை பொருளர் ராமு, உள்பட பலர் பங்கேற்றனர்.