தத்தகிரி முருகன் கோவிலில் சஷ்டி பக்தர்கள் வழிபாடு

Update: 2023-07-24 04:59 GMT

தத்தகிரி முருகன் 

சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இடும்பன், பஞ்சமுக விநாயகர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சனிபகவான், துர்க்கையம்மன், ஆஞ்சநேயர், பிரம்மா, விஷ்ணு, சிவன், அவதுாத சுவாமிகள் உள்ளது.

சஷ்டியை முன்னிட்டு தத்தகிரி முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. முருகன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேந்தமங்கலம், காந்திபுரம், முத்துகாப்பட்டி, நாமக்கல், அக்கியம்பட்டி, பொட்டணம், மின்னாம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News